search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் தீக்குளிக்க முயற்சி"

    • ரூ.14 லட்சம் கடனுக்கு ரூ.71 லட்சம் வட்டி கேட்டனர்
    • 4 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் கார்த்திகேயன் சாலை பகுதியை சேர்ந்தவர் அகிமா பீபி. இவருக்கு மமுதா, சுவேதா என 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அகிமா பீபி நேற்று தனது மகள்களை அழைத்துக்கொண்டு ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகம் முன்பு தான் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் அகிமா பீபியிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி அமர வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கலெக்டர் தனலட்சுமி மற்றும் ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அகிமா பீபி அவரது மகள்களிடம் விசாரணை நடத்தினர்.

    கடந்த 2017-ம் ஆண்டு சந்தவாசலை அடுத்த கேசவபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ 10 லட்சமும், அதனைத் தொடர்ந்து 2018 -ம் ஆண்டு மீண்டும் 3 லட்சமும், 2020-ம் ஆண்டு ரூ.1 லட்சமும் வாங்கி உள்ளனர்.

    வாங்கிய கடனுக்கு பணம் கொடுத்தவர்கள் வீட்டை அடமானம் போட்டுக் கொள்வதாக கூறி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வீட்டை அவர்கள் பெயருக்கு எழுதிக் கொண்டுள்ளனர். இதற்கு உடந்தையாக ஆரணி, களத்து மேட்டு தெருவை சேர்ந்த உறவினர் மற்றும் சிலர் ரூ.14 லட்சத்திற்கு ரூ. 85 லட்சம் கேட்டு குடும்பத்தில் உள்ளவர்களை மிரட்டி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடனை திருப்பிக் கொடுக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரத்துடன் வீட்டை இடிக்க வந்தபோது அவர்களுடன் தகராறு ஏற்பட்டு அகிமா பீபி குடும்பத்தாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஆரணி டவுன் போலீஸ் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.

    இதையடுத்து அகிமா பீபி கொடுத்த புகாரின் பேரில் கடன் கொடுத்து மிரட்டியவர்கள் மீது கொலை மிரட்டல், வீடு சேதபடுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணியில் ரூ.14 லட்சம் கடனுக்கு ரூ.71 லட்சம் வட்டியாக கேட்டதால் பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×